நிலா மகள்

இவள் அன்னை
அரசை சுற்றி வந்து
இவளைப் பெற்றதால்
அரசு சொந்தம் கொண்டாடவில்லை
இந்த அழகுப் புதயலுக்கு

அனைவரும் தலையில்
சூடுவது வெள்ளை
மல்லிகை
அவள் சூடுவதோ
வெள்ளை மாளிகை

அவள் கனிக்குள்
தோன்றாது
ஒரு கன்னிக்குள் தோன்றிய
சித்திர விதை

தன் ஓர விழிப் பார்வையினால்
என்னை அணு அணுவாய்
செய்கின்றாள் சித்திரவதை

அவள் பார்க்கும்
அரைக் கண்
பார்வை கண்ணல்ல
அது
என்னைக் கொல்லும்
அரக்கன்

அவள் தாஜ்மஹால்
நான் அவளைக்
கட்ட நினைக்கும்
ஷாஜகான்

அவள் சந்தனக்காடு
நான் அவளைக்
கடத்த நினைக்கும்
வீரப்பன்

அவள் நிறம் மாதுளை
அவளால் என்
மனதில் விழுந்தது மா துளை

அவள் அழகிய வாரணம்
அவளால் ஏற்பட்ட
இழப்பிற்கு அரசு
கொடுக்குமா எனக்கு
நிவாரணம்

எழுதியவர் : குமார் (12-Apr-20, 8:40 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : nila magal
பார்வை : 107

புதிய படைப்புகள்

மேலே