நம்பமுடியாமல்

அன்று காலை தனது உடல் பயிற்சியை சிறிதாக முடித்து குளியல் அறைக்கு சென்ற அரவிந்தன் ஷவரில் தன் குளியலை தொடங்கியதும் ஏ.ஆரின் பாடல்" நீ.....ல மலைசாரல் தென்றல் நெசவு செய்யும்மிடம். கீச் கீச் என்றது கிட்டவா என்றது " என விட்டு விட்டு பாடிகொண்டே தனது குளியலை முடித்து நிதானமாக ஆபிஸ் கிளம்பினான்.

கோயம்பத்தூரில் தனது ஆர்.வி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் சென்னை கிளைக்கு மாதம் மூன்று முறை வந்து செல்வது வழக்கம். நேற்றிரவு பின் இரவு தான் இங்கு வர முடிந்தது. வழியில் கார் பிரேக் டவுன் ஆகியதால் தாமதம்.

அவன் 2 BH ஆப்பாட்மன்ட் போஷனில் தங்கி இருந்ததான். அடுத்தடுத்து  என 'ப' வடிவ குடியிருப்புகள் . அரவிந்த் கிளம்பி வெளியே வந்தும் .பக்கத்து வீட்டு கதவை மூடி அடைத்துவிட்டு திரும்பினாள் அபர்ணா வயது இருபத்திநாலு .சிவந்த வட்டவடிவ முகம் பார்க்க குழந்தை தனம் இல்லாமல் வயது கேற்ப.

அபர்ணா அவனைப்பார்த்து  சிநேகமாய் புன்னகைய்து ஹாய் என்று கூறி நல்ல படுறீங்க  என்றாள்.பக்கத்து பேஷன் தனே கேட்டிருக்கும் என்றான் . சின்ன வயதில் இருந்தே இந்த பழக்கம் என கூறி 'ஓ ஆம் கெட்டிங் லேட் ஸீ யூ தென்' படிகளில் இரங்கி  சென்றுவிட்டான்.

அன்று அரவிந்க்கு வேலை பளு காரணமாக  வீட்டிற்கு வரவில்லை . மறுநாள் காலை நேரம் கழித்து வந்தான் வீட்டினுள் செல்லும் போது  அதே பக்கத்து பேஷனல் ஒரு  பெண்மணி கதவை அடைக்க முடியாமல் திணறி கொண்டிருந்தாள். அதை பார்த்து அவருக்கு உதவ சென்றான்.

இப்படி கொடுக்கமா என்று கூறி நேற்று உங்கள் 'டாட்டர்' ஈசியா அடைச்சாங்களே என்று சொல்லி புன்னகை செய்தான் .அந்த பெண் என்னப்பா சொல்ற நான் இங்கு மாதத்திற்கு ஒரு முறை தான் வந்து எல்லாம் சுத்தம் செய்துவிட்டு போவேன் எங்கள் வீடுதான் என்றார் .இதை கேட்டவுடன் அப்போ நேற்று ஒரு பெண் இங்க இருந்தாங்க நான் கூட அவங்ககிட்ட பேசினேன் பெயர் தெரியாது கேட்க மறந்துடேன் என்றான்.

அந்த பெண் பார்க்க எப்படி இருக்கும் பா என்று கேட்டார்  அங்கிருந்தவர். அரவிந்தும்  முக சாயலை மட்டும் கூற . என்னப்பா சொல்ற அவ என் மக தான்பா அவளுக்கு  ஆக்ஸிடெண்ட் ஆகி பத்து வருஷமா கோமாவில் இருக்கா ஹாஸ்பிட்டலில்.

ஒரே பெண் டிரிட்மன்ட் பார்த்துட்டுப் இருக்கோம். நானும் அவ அப்பாவும் ஹாஸ்பிடல் பக்கத்தில் ஒரு வீடு எடுத்துக் தங்கி அவள கவனித்து கொண்டு இருக்கோம் கடவுள் கண்டிப்பாக கைவிடமாட்டார் அப்படிங்கிற நம்பிக்கையில் என்று அவனை பார்தார் . அரவிந்த் சிலையாக நின்றுவிட்டான் என்னடா இது சினிமாவில் நடக்கிறது எல்லாம் நிஜத்திலும் நடக்குமா? என்று...
நினைத்து கொண்டான் அரவிந்
✍️
Piyu

எழுதியவர் : Piyu (13-Apr-20, 10:27 pm)
சேர்த்தது : Piyu
பார்வை : 151

மேலே