ஒரு பக்க கதைகள்

என்ன நடக்கிறது? இந்த உலகத்தில்
யாரும் எதிர்பாராத திருப்பம் வரும்...
நோய்களுக்கு பஞ்சம் இல்லை.. இங்கு இழப்புக்கும் பஞ்சமில்லை...
வேலை வாய்ப்புகள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது... பணம் தான்
வாழ்வில் மனிதர்களை மதிக்கவும்,மிதிக்கும் பிரித்து பார்க்கிறது... படித்தோம் ஆனால் படித்ததிற்கு ஏற்ற வேலை எவருக்குமே கிடைப்பது இல்லை....
அதற்காக பலரிடம் பலவற்றை இழக்கிறோம்... ஓடி ஓடி உழைக்கின்றோம். ஆனால் ஒவ்வொருவரும் பிடித்து வாழ்கிறோமா?

நாம் ஓடி கொண்டு தான் இருக்கிறோம்.... இன்னும்...

இரு இளைஞர்கள் ரொம்ப நாள் நட்பு
20வருட நட்பு..இணை பிரியாதவர்கள்.எங்கு சென்றாலும்
ஒன்றாக செல்வார்கள்... புதிய புதிய
சிந்தனை படைத்தவர்கள்...

இவர்களின் உடை மிகவும் அழகாக
இருக்கும்.. அவர்கள் போடும் உடையை அவர்களே தைத்து அணியும் பழக்கம் கொண்டவர்கள்..

ஆள் பாதி ஆடை பாதி என உலகம் பல விதமாக மாறிவருகிறது...
நண்பர்களே நினைவில் கொள்ளுங்கள்.. உடை மீது கவனம் வேண்டும்..

அதற்கேற்ப தன் நிலைப்பாட்டையும்
மாறுபாடு இல்லாமல் அழகான உடையை வடிவமைத்து உடுத்துவர்..

படித்து முடித்து பட்டம் பெற்றவர்கள்.. ஆனாலும் வேலை தேடும் சமயத்தில்
அவர்களுக்கு வேலையும் சரியாக அமையவில்லை.. தன் குடும்பத்திலும் மிகுந்த பிரச்சினை..

என்ன செய்யலாம் என யோசிக்கும் போது உடை தைத்து தொழிலை பெருக்குவோம் .என முடிவு செய்து கடை ஒன்றை வைத்தார்கள்....

முதலில் யாருமே அவர்களிடம் துணி தரவில்லை... அவர்கள் தங்கள் துணியை விதவிதமாக தைத்து விளம்பரம் செய்தனர்... பிறகு அவர்கள் கடையில் பலரும் துணியை கொடுக்க தொடங்கினர்..
பாராட்டும் கிடைத்தது..
உடனே கடையில் பலரும் பல விதமாக துணியை கொடுக்க தொடங்கினர்... இப்படி படிப்படியாக
முன்னேற தொடங்கினர் இருவரும்.

பின் இத்தொழிலை விரிவு படுத்த நினைத்து அருகிலே ஒரு துணி கடையையும் வைத்தனர்...
இருவரும் அவ்வூரில் அனைவரும்
மதிக்கும் நிலையை பெற்றனர்..
மகிழ்ச்சியோடு தன் குடும்பத்துடன்
வாழ தொடங்கினர்...

கைதொழிலை ஒன்றை கற்று கொள்.கவலை இல்லை என்று புரிந்து கொள்...

எழுதியவர் : உமா மணி படைப்பு (13-Apr-20, 6:28 pm)
சேர்த்தது : உமா
Tanglish : oru pakka kadhaigal
பார்வை : 167

மேலே