கடவுள் என்பது பொய்யோ---பாடல்---

மெட்டு : நன்றி சொல்லவே உனக்கு

பல்லவி :

ஆண் : தெய்வம் என்பதே உலகில்
வெறுங்கல்லுதான் உண்மையில்லையே...
நம்பிச் செல்வதால் மனதில்
தினந்தொல்லைதான் நன்மையில்லையே...

பெண் : தூண் துரும்பில் இறைவன் இருப்பான்
ஆசைகள் நீங்கிட அவன் தெரிவான்...

ஆண் : காயம்பட்ட நெஞ்சம் கொண்டு காணத் துடித்தேன்
கண்ணுக்குள்ள கண்ணீர் வற்றி இரத்தம் வடித்தேன்...

பெண் : ஞானமென்ற பார்வை கொண்டு தேடு கிடைப்பான்
ஞாயம் கொன்ற பாவிகளைத் தேடி அழிப்பான்...

ஆண் : தெய்வம் என்பதே

சரணம் 1 :

பெண் : வீசும் தென்றல் வரும் தொடும் முகம் கேட்டிடுவாயோ?...
பூங்குயிலின் இசை அதை விழி பார்த்திடுவாயோ?...

ஆண் : உயிர்தொடும் காற்றில் வாழ்ந்து ஒரு குயில்முகம் நானும் பார்ப்பேன்
நான் தினசரி கோவில் சென்றும் அவன் குரலினை என்று கேட்பேன்...

பெண் : உன்னைத் தோண்டு உண்மை தோன்றும்
அந்த நேரம் எந்தன் சொல்லின் அர்த்தம் விளங்கிடும்...

ஆண் : காயம்பட்ட நெஞ்சம் கொண்டு காணத் துடித்தேன்
கண்ணுக்குள்ள கண்ணீர் வற்றி இரத்தம் வடித்தேன்...

பெண் : ஞானமென்ற பார்வை கொண்டு தேடு கிடைப்பான்
ஞாயம் கொன்ற பாவிகளைத் தேடி அழிப்பான்...

ஆண் : தெய்வம் என்பதே

சரணம் 2 :

பெண் : வேதனைகள் சுடும் நொடி மனம் கோவிலைத் தேடும்
ஓர்அமைதி சுகம் தரும் அது ஏன் அறிவாயோ?...

ஆண் : ஒரு அடங்காத தாகம் ஒரு நதியினைத் தேடி ஓடும்
அங்குத் தெரிவது கானலென்று மனம் அறிந்திட ஏங்கி வாடும்...

பெண் : வாதம் செய்து வார்த்தை வெல்லும்
நீயும் உன்னை நீங்கி நின்று உண்மை உணர்ந்திடு...

ஆண் : காயம்பட்ட நெஞ்சம் கொண்டு காணத் துடித்தேன்
கண்ணுக்குள்ள கண்ணீர் வற்றி இரத்தம் வடித்தேன்...

பெண் : ஞானமென்ற பார்வை கொண்டு தேடு கிடைப்பான்
ஞாயம் கொன்ற பாவிகளைத் தேடி அழிப்பான்...

ஆண் : தெய்வம் என்பதே
(10/04/2020)

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (14-Apr-20, 8:40 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 534

மேலே