சித்திரைப் பாவையே வருக
கவிதை
சித்திரைப் பாவையே வருக!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
இன்று
எட்டுத் திக்கிலும்
சித்திரைப் பாவையே உந்தன்
முத்திரை முகம் தோன்றுகிறதே !
இன்று
நோக்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
நேசக்கரம் நீட்டுகிறதே !
இன்று
கேட்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மனிதநேயம் ஒலிக்கிறதே !
இன்று
தீண்டுமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மலரின் மென்மை உணரப்படுகிறதே !
இன்று
பேசுமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
சீரும் சிறப்பும் பேசப்படுகிறதே !
இன்று
நுகருமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
நறுமணம் வீசுகிறதே!
இன்று
வணங்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
தெய்வ அருள் கிட்டுகிறதே !
இன்று
காலைத் துயிலெழுந்து
நாட்காட்டியைப் பார்த்தால்
பங்குனித்திங்கள் பெற்ற
சித்திரைப்பாவையே உந்தன்
முத்திரை பதித்த
முகம் தெரிகிறதே !
சத்தியம் தர்மம் மனிதநேயம்
நித்தியம் உலகில் வளர
சித்திரைப் பாவையின்
சிரித்த முகம் பார்த்து
உள்ளம் மகிழ்ந்து
வணங்கி வரவேற்போம் !
பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை