சமுக பற்றின் தேடல்
விஞ்ஞான அறிவில் விளைந்த
வேடிக்கை இனமோ - நாம்
மெய்ஞான அறிவிழந்து
ஊடகத்தில் உணர்விழக்கும்
வாடிக்கை இனமோ நாம் ...
சரித்திரங்கள் எழுந்த போதும்
- அன்று
சமத்துவமோ அகலவில்லை
இலக்கியங்கள் இயைந்த போதும்
- மன
இருட்டென்பது இணையவில்லை
சரித்திரங்கள் பலவற்றை
தரித்திரத்தில் எறிந்தோம்
சமத்துவம் தான் அது தன்னை
சாதி சமுத்திரத்தில் எரித்தோம்...
மகத்துவமே சேர்ந்தன - அன்று
மாண்டோர் பலராலே - அதன்
அதன் மகிமை இழந்து
தவிக்கின்றோம் - நம்
மதி கெட்ட செயலாலே...
இன வறுமை தனை அடைந்து
நின்றோம்
பல உரிமை தனை இழந்து
நின்றோம்
அடுத்த நொடி வாழ்விற்கும்
அகதிகளாய் அலைகின்றோம்-அதை
எடுத்துணர மனம் இருந்தம் - பண
ஏற்றத்தால் சாகின்றோம் - ஆயினும்
ஆணவமும் அகலவில்லை - நம்
ஏளனமும் குறையவில்லை....
தாய் தந்தை உற்றாரையே
தரணியில் தவிக்க விடும்
தரம் கெட்ட மனம் நம்மில்
சரீரத்தில் உணர்வுமேது...
சமுகத்திலோ பற்றுமேது?????...