போய் சேர்ந்தாள்
பிறப்பெடுத்த பெண் சிசுவின்
பூ முகம் பார்க்காம
பெத்தவளே தவிக்கவிட்டு
பரிகாரம் தேடி
பாடையில ஏறினாளோ !
பச்சிளம் சிசுவென
பாழும் மனசு நினைக்கலையே
பொண்ணா பொறந்தாலே
பூமியில படும் பாட்டை—காணப்
பொறுக்காம போனாளோ
தூக்கி வளர்த்து ஆளாக்க
தாயாய் வந்த சித்தி
கால ஓட்டத்தில்
கல் நெஞ்சம் கொண்ட
கூனியானாள் –பெண்ணோ
பெற்றவளிடமே போய் சேர்ந்தாள்