பேருவகை

மணம் வீசும் மலரொன்று
மலர்ந்திருக்கும் நிஜ பொழுதே
செடிகளுக்கு பேருவகை ..

நிறம் கொண்ட மலர்களிடத்தே
வண்டுகளுக்கு பேருவகை ....

மழை  வரும் நேரத்தில்
மண் கொள்ளும் பேருவகை...

கவிதை வரிகள் கண்டுவிட்டால்
மனம் கொள்ளும் பேருவகை ....

✍️
Piyu

எழுதியவர் : Piyu (18-Apr-20, 3:14 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : peruvakai
பார்வை : 62

மேலே