சமூக இடைவெளி

நெருப்பு பாலை!!
குடித்த பிறகும்!!
இந்த பூனைகளுக்கு!!
இன்னும் புத்திவரவில்லை!!

கொரோனாவின்
கோரம் அறியாமல்!!
வைக்கோல் போர்
நெருப்போடு
விளையாடும் விளையாட்டு!!!!

அழிவும் அச்சமும்!!
ஏவு கணைகளாய்!!
கண் முன்னே நிற்கின்றன!!!

இருக்கின்ற ஒரு நோய்க்கு!!
மருந்தை தேடி!!
இல்லாத பல நோய்கள்!!
ஏற்படுத்தும்!!
விளையாட்டா?? விஞ்ஞானம்??

வேண்டவே வேண்டாம்!!!
சாண் ஏறி முழம் சறுக்கும்!!
அவலம் வேண்டாம்!!!

அணு அணுவாய் நகர்ந்தாலும்!!!
அன்பும் அறிவும்!!
அமைதியும் இன்பமும்!!
ஆழமாய் வேரூன்றி!!
ஆலமாய் பரவிட!!
சமூக இடைவெளி
மட்டுமே போதும்!!

விழித்திரு!! விலகி இரு!!!

--- சக்திராசன்

எழுதியவர் : சக்திராசன் (18-Apr-20, 3:43 pm)
சேர்த்தது : Sakthirasan
பார்வை : 947

மேலே