Sakthirasan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sakthirasan |
இடம் | : Ariyalur |
பிறந்த தேதி | : 23-Jul-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Mar-2020 |
பார்த்தவர்கள் | : 101 |
புள்ளி | : 4 |
கலை, கவிதை மிகவும் பிடிக்கும். ஆனால் என் படிப்போ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.. இயந்திரத்தோடு உறவாடிய நேரம் போக!!!
நெருப்பு பாலை!!
குடித்த பிறகும்!!
இந்த பூனைகளுக்கு!!
இன்னும் புத்திவரவில்லை!!
கொரோனாவின்
கோரம் அறியாமல்!!
வைக்கோல் போர்
நெருப்போடு
விளையாடும் விளையாட்டு!!!!
அழிவும் அச்சமும்!!
ஏவு கணைகளாய்!!
கண் முன்னே நிற்கின்றன!!!
இருக்கின்ற ஒரு நோய்க்கு!!
மருந்தை தேடி!!
இல்லாத பல நோய்கள்!!
ஏற்படுத்தும்!!
விளையாட்டா?? விஞ்ஞானம்??
வேண்டவே வேண்டாம்!!!
சாண் ஏறி முழம் சறுக்கும்!!
அவலம் வேண்டாம்!!!
அணு அணுவாய் நகர்ந்தாலும்!!!
அன்பும் அறிவும்!!
அமைதியும் இன்பமும்!!
ஆழமாய் வேரூன்றி!!
ஆலமாய் பரவிட!!
சமூக இடைவெளி
மட்டுமே போதும்!!
விழித்திரு!! விலகி இரு!!!
--- சக்திராசன்
அதோ!!
வருகின்றாள்!!!
விழி எனும் வில் சுமந்த!!
ஆனந்தப் பேராழி!!!
உதட்டசைவில் என்னை அடக்கும்!!
உயரதிகாரி!!!
மனதில் சத்தம் இன்றி!!
ஆட்சி செய்யும்!!
மாயாவி!!!
மதியை மயக்கிடுவாள்!!
தாயாகி!!!
மலர்களும் மண்டியிடும்!!
அவள் முன்!!
சேயாகி!!!!
புற்கள் சுமக்கும்!!
அவள் பாதம்!!
சுகமென்று!!!
பூக்களும் நினைக்கும்!!
அவள் கூந்தலில்!!
மரித்தல்!!
சொர்க்கமென்று!!!
------ சக்திராசன்
மச்சுவீடு வேணான்னு
தென்னகீத்து வேஞ்சுட்டு
தன்னோட மாட்டுக்கு
பனங்கீத்து வேஞ்சவன்டா
நம்மூரு விவசாயி !!
வட்டிக்காரன்கிட்ட கடன்வாங்கி
மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்
வீட்டுக்கு ரேஷனரிசியும்
சாப்பிடற அவலமிங்கே
நம்மவூரு விவசாயிக்கு!!
வயசுக்கு வந்த பொன்னவச்சுட்டு
சேத்து வச்ச நகையெல்லாம்
தோட்டத்துல முதல்போட்டு
தேம்பியழுது நிக்கிறாண்டா
நம்ம ஊரு விவசாயி!!
உறவூட்டுக்கு போனாலும்
காபிகுடிக்க நேரமில்லை
கால்நடைக்கு பசிக்கும்னு
கால்வலிக்க ஓடிவருவான்
நம்மவூரு விவசாயி !!
மணிபன்னெண்டு ஆனாலும்
சூரியன் சுட்டெரிச்சலும்
வேர்வையிலே நனைஞ்சுக்கிட்டு
பாடுபடறவன்டா
நம்ம ஊரு விவசாயி !!
இட்லி தோசை சாப்பிட்
*ஓர் மயிலிறகு* !!
மயிலே!!
உன் இறகை திருடி
ஒளித்து வைத்துவிட்டேன்!!!
என் பாடப்புத்தகத்தில்
பத்திரமாக!!!!
பாடப்புத்தகம்
பரண் மேலேற!!
நீ தேடி வருவாய்!!
என நானும்!!
உன்னை தேடி வரும்!!
என நீயும்!!
காத்திருக்கோம்!!
நெடுங்காலமாக!!!
மயிலே!!
உன் இறகு!!
அழகின் உச்சியில்!!
இருப்பதால்
உன் அழகை!!
கற்பனையில் சித்தரிக்க
என் கனவுகள்
கஷ்டப்படுகின்றது!!
எத்தனையோ
நள்ளிரவில் உன்
வண்ண இறகோடு
நான் பேசினாலும் உன்
சம்மதமின்றி ஓர் வார்த்தை!!
உதிர்க்கவில்லை!! - உன்
ஒற்றை மயிலிறகு!!
காண மயிலே!!
நீ இறகை தொலைத்து
என் கனவோடு
என்னையும் களவாடி
சென்றாயே!! - நீ
தேடி வருவாய் என
காத
எங்கே எனது கவிதை!!!!
என்
இதய வீடு!!
தீப்பற்றி எரிகின்றதே!!
கண்ணீர்
கொண்டு அனைத்து
தேடுகின்றேன்!!
எங்கே எனது கவிதை!!!!
கனவின்
கற்பனையை பிழிந்தெடுத்து!!!!
உன் நினைவால் நிரப்பப்பட்ட!!
எழுதுகோலால்!!
என் இதயம் எழுதிய
கவிதை உன்னில்!!!
என் இதயத்தோடு தொலைந்ததே!!!
எங்கே எனது கவிதை!!!!
காதலே!
கவிதை மீதேறி!!
காகிதத்தில் புறப்பட்டாயே!!!
கசங்கிய
காகிதத்தில் நீ மட்டும்!!
காயம்பட்டு கிடக்கின்றாய்!!!!
எங்கே எனது கவிதை!!!!
கவிதையை
ஈன்றது நான்!!!
கருவானது உன்னால் தானே!!
ஒன்றிரண்டல்ல!!!!
கவிதைகள் அனைத்தையும்!!!
உன் கோபத்தில் தொலைத்து
தேடுகின்றேன்!!!
எங்கே எனது கவிதை!!!