அதோ வருகின்றாள்
அதோ!!
வருகின்றாள்!!!
விழி எனும் வில் சுமந்த!!
ஆனந்தப் பேராழி!!!
உதட்டசைவில் என்னை அடக்கும்!!
உயரதிகாரி!!!
மனதில் சத்தம் இன்றி!!
ஆட்சி செய்யும்!!
மாயாவி!!!
மதியை மயக்கிடுவாள்!!
தாயாகி!!!
மலர்களும் மண்டியிடும்!!
அவள் முன்!!
சேயாகி!!!!
புற்கள் சுமக்கும்!!
அவள் பாதம்!!
சுகமென்று!!!
பூக்களும் நினைக்கும்!!
அவள் கூந்தலில்!!
மரித்தல்!!
சொர்க்கமென்று!!!
------ சக்திராசன்