ஓர் மயிலிறகு
*ஓர் மயிலிறகு* !!
மயிலே!!
உன் இறகை திருடி
ஒளித்து வைத்துவிட்டேன்!!!
என் பாடப்புத்தகத்தில்
பத்திரமாக!!!!
பாடப்புத்தகம்
பரண் மேலேற!!
நீ தேடி வருவாய்!!
என நானும்!!
உன்னை தேடி வரும்!!
என நீயும்!!
காத்திருக்கோம்!!
நெடுங்காலமாக!!!
மயிலே!!
உன் இறகு!!
அழகின் உச்சியில்!!
இருப்பதால்
உன் அழகை!!
கற்பனையில் சித்தரிக்க
என் கனவுகள்
கஷ்டப்படுகின்றது!!
எத்தனையோ
நள்ளிரவில் உன்
வண்ண இறகோடு
நான் பேசினாலும் உன்
சம்மதமின்றி ஓர் வார்த்தை!!
உதிர்க்கவில்லை!! - உன்
ஒற்றை மயிலிறகு!!
காண மயிலே!!
நீ இறகை தொலைத்து
என் கனவோடு
என்னையும் களவாடி
சென்றாயே!! - நீ
தேடி வருவாய் என
காத்திருக்கின்றோம்!!
நானும்!! - உன்!!
மயிலிறகும்!!!
- சக்திராசன்!!!!!!