நம்மவூரு விவசாயி

மச்சுவீடு வேணான்னு
தென்னகீத்து வேஞ்சுட்டு
தன்னோட மாட்டுக்கு
பனங்கீத்து வேஞ்சவன்டா
நம்மூரு விவசாயி !!

வட்டிக்காரன்கிட்ட கடன்வாங்கி
மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்
வீட்டுக்கு ரேஷனரிசியும்
சாப்பிடற அவலமிங்கே
நம்மவூரு விவசாயிக்கு!!

வயசுக்கு வந்த பொன்னவச்சுட்டு
சேத்து வச்ச நகையெல்லாம்
தோட்டத்துல முதல்போட்டு
தேம்பியழுது நிக்கிறாண்டா
நம்ம ஊரு விவசாயி!!

உறவூட்டுக்கு போனாலும்
காபிகுடிக்க நேரமில்லை
கால்நடைக்கு பசிக்கும்னு
கால்வலிக்க ஓடிவருவான்
நம்மவூரு விவசாயி !!

மணிபன்னெண்டு ஆனாலும்
சூரியன் சுட்டெரிச்சலும்
வேர்வையிலே நனைஞ்சுக்கிட்டு
பாடுபடறவன்டா
நம்ம ஊரு விவசாயி !!

இட்லி தோசை சாப்பிட்டா
வேலைசெய்ய முடியாதுனு
பழையசோறும் பச்சைமொளகாயும்
சப்பிட்டே பசியாத்துவான்
நம்ம ஊரு விவசாயி!!

போட்டமுதல் நட்டமாச்சுனு
அவன்சுருண்டு படுத்தா
நமக்கெங்கே சாப்பாடு !!

அதிகாலை சேவகூவாட்டியும்
அவன் எழவில்லைனா
நமக்கெங்கே நல்லபாலு!!

காட்டையும் மேட்டையும்
கழனியாக்க சேறுன்னு அவன் பாத்தா
நமக்கெங்கே
நெல்சோறு!!

படியளப்பவன் தான்
சாமினா
நமக்கிங்கே அவன்தானே
கும்பிடற சாமி !!

எழுதியவர் : கோப்பெருந்தேவி (11-Apr-20, 9:23 pm)
பார்வை : 111

மேலே