நட்பு 💪

நட்பு 💪

காலத்தால் கரைந்து விடும் உறவுகள் பல இருக்க
காலத்தால் மறக்கபடும் புகழ் பல இருக்க
காலத்தால் மறைந்து விடும் மனிதர்கள் பல இருக்க
நண்பர்கள் நாங்கள் உயிர் நீத்த பிறகும் இந்த காலம் எங்களை மறக்காது, மறைக்காது.
அதோ அந்த மலை எங்கிலும் எங்கள் சிரிப்பொலி எதிரொலிக்கும்.
இதோ இந்த கடல் அலைகள் எங்கள் கால்களுக்கு ஏங்கும்
அதோ அந்த ஏழை அன்னை எங்கள் பெயரை அவள் பிள்ளைகளுக்கு பெயராக சூட்டி பெருமைபடுகிறாள்.
பல நூல்கள் வரலாம்
ஆனால் திருக்குறள் இருக்கும் வரை
வானம், பூமி இருக்கும்
வரை நிலைத்து நிற்கும்
மானுட உறவில்' எங்கள் நட்பும்'
அந்த சூரியன் போல் என்றும் ஒளி கொடுக்கும்.
மானுடத்துக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
- பாலு.

எழுதியவர் : பாலு (19-Apr-20, 9:28 pm)
சேர்த்தது : balu
பார்வை : 809

மேலே