உயிர்த்தோழி
உயிர்த்தோழி :
காதலுக்கு உதவி செய்தவள் - ஆனால்
காதலிக்கும் அவள் மேலானவள் - ஏனெனில்
பிரிந்த நிலையிலும் - இன்றும் என்றும்
புரிந்துக் கொள்ளும் உறவானவள் தோழி!
மனைவி-காதலி என்ற இருநிலையை தவிர்த்து
மனதில் தெய்வத்தின் நிலைக்கு வைத்து
மனதிலே கொண்டாடப் படக்கூடியவள் தோழி!
மகளை மணமடித்து தரும் தந்தை
மகளை இனி காணமுடியுமோ என்றெண்ணி
மனம்வாடுவது போல் - தன்தோழிக்கு மணமானாள்
மீண்டும் தோழியைக் காணமுடியுமோ என்றெண்ணி
மனதில் கவலையோடும்- முகத்தில் புன்னகையோடும்
மணமேடையேறி தோழியை வாழ்த்திவிட்டு -என்றும்
மனதில் நல்லுறவைப்போற்றுவது தோழன் உறவு!
புரிந்துக்கொண்ட தோழி கிடைத்தால் அதிர்ஷ்டசாலி
புரிந்துக்கொண்ட தோழியின் கணவனும்- நம்மை
புரிந்துக்கொண்டு நமக்கு தோழனாயின் - நட்பெனும்
பேருலகில் -நாமே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி!
அவள் உடன்பிறவா சகோதரி - என்னை
அவள் கருவினில் சுமக்காத தாய்
அவள் என்றுமே உன்னதமான தோழி -
அவள் என்றுமே என்கவலைகளை சுமந்தவள்
அவள் எனக்குள் தன்னம்பிக்கையை ஊட்டியவள்
அவள் பெண்மரியாதையை எனக்கு கற்பித்தவள்
அவள் என்றுமே - என் வணக்கத்திற்குரியவள்
அவள் என்றுமே என் உயிர்த்தோழி...!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி