சமூக வலைத்தளங்களால் சீர்கெடும் இளம்பருவம்

பெரியோர்களே,நீங்கள் வீட்டில் அன்பாக அரவணைப்பாக இளம் குழந்தைகளுடன் இல்லாததால் மற்றம் நேரத்தை செல விடாததால் ஒத்துக் கொள்கிறேன் உங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது அவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் தனிமையை தணித்துக்கொள்ள மற்றும் அதிகப்படியான மன அழுத்தத்தால் அன்பையும் ஆறுதலையும் தேடிவருகின்றனர் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் சமூக வலைத்தளம் தீமையே அதிகமாக கொண்டுள்ளது பித்தலாட்டக்காரர்கள் மற்றும் காம பிசாசுகளின் கூடாரமாக உள்ளது இளம் குழந்தைகள் சமூகவலைதளங்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிங்கள் கருத்துக்களை பரிமாறவும் மற்றும் பள்ளிப்பருவ கல்லூரி பருவம் நட்புகள் மற்றும் சொந்தங்கள் இணைப்பு வைத்துக்கொள்ள கருவியாக சொல்லுங்கள் முக்கியமாக படிப்பதற்கும் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கும் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர தனிமையை தணித்துக்கொள்ள அல்ல குறிப்பாக இளம் பருவ ஆண்கள் புதிய பெண் நட்பை புதுப்பித்துக் கொள்ள படாத பாடு படுகிறார்கள் நேரத்தை வீணாக்கி கிறார்கள் fake id கலின் ஆபாச மற்றும் அழகான படத்தை பார்த்து போய் மெசஞ்சரில் அன்பே ஆருயிரே என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் கௌரவிக்கப் படுகிறார்கள் ஆனால் அலட்சியத்தின் காரணமாக கவலை கொள்கிறார்கள் முக்கியமாக அப்பாவித்தனமான குழந்தைகள் இதற்குக் காரணம் அன்பு இல்லை வீட்டில்.பெண்கள் பொது இடத்தில் வந்தால் ஏகப்பட்ட பிரச்சனை சந்திக்க வேண்டியுள்ளது சமூக வலைத்தளத்தில் ஆபாசமான வார்த்தைகள் படங்கள் பேச்சுக்கள் மிரட்டல்கள் சமீபத்தில் நடந்த ஆய்வுகளில் பெண்கள்தான் அதிகமாக சமூக வலைத்தளத்தில் உலா வருகிறார்கள் என்று புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது ஆதலால் அவர்களுக்கு தைரியத்தை கற்றுக்கொடுங்கள் எப்படிச் அபபிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்று பிரைவசி உண்டாக சொல்லுங்கள் ஏனென்றால் பிரைவேட் குரூப்களில் அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் போது கருத்தியல் மோதல் வரும் போது முதலில் தாக்கப்படுவது அவர்கள் புகைப்படங்களே மற்றும் தொலைபேசி எண்கள் .பெரியவர்களை வீட்டில் அடக்குமுறை விடுங்கள் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களில் போக அனுமதி கொடுங்கள் தயவுசெய்து பெரியவர்களை கையெடுத்து கும்பிடுறேன் உங்கள் வரட்டு கவுரவம் ஆசையெல்லாம் கைவிட்டு பிள்ளைகளுக்காக வாழுங்கள் ஏனென்றால் போலி பெண்ணியவாதிகள் ஆணிய வாதிகள் முற்போக்குவாதிகள் புரட்சிகள் என்ற பெயரில் போலி கருத்துக்களை பரப்பி அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள் சில போலிகள் அவர்களின் பேச்சின் மூலமாக இழுக்கப்பட்டு உங்கள் குழந்தைகளும் ஈடுபட வைக்க முயற்சிக்கிறார்கள் இதெல்லாம் கவனிக்காமல் நீங்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.ஐயா பெரியார் அம்பேத்கர் மற்றும் மார்க்ஸ் லெனின் சொல்லாத கருத்துக்களை பரப்புகிறார்கள் மனம் வேதனை அடைகிறது இவர்கள் பெருந்தலைவர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு ஏற்படும் துயரத்தை பார்த்து பாடுபட்டு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தார்கள் அதை திரித்து கூறி சீரழித்த வருகிறார்கள் ஆதலால் பெரியோர்களே உங்கள் குழந்தைகளை கவனியுங்கள் அன்பாக இருங்கள் ஏதாவது தப்பாக பேசி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் நானும் தனிமையை தணித்துக்கொள்ள சமூக தளம் தேடிவந்து ஏமாற்றப்பட்டவன் யாரும் ஏமாற கூடாது என்று கவலையில் கூறுகிறேன் இளம் குழந்தைகள் சந்தோஷம் என்று நம்பி சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் தயவு செய்து கவனியுங்கள்

எழுதியவர் : sakthivel (20-Apr-20, 12:13 pm)
சேர்த்தது : sakthivel
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே