தஞ்சை பாடல் வரிகள்
தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் செம்மை...
தலையாட்டி பொம்மை,நம்ம தஞ்சாவூர் செம்மை...
அறம்,வீரம் பொறந்த மண்ணு...
சோழன் ஆண்டான்,இங்க நின்னு...
தஞ்சை பெருமை கண்டு,
தலைவணங்கு நீயும் இன்று...
இரத்தம் மொத்தம்,சிந்தி உழைப்பான்...
நித்தம் முத்தம்,தந்தே ரசிப்பான்...
ஊரு முழுக்க,சிவனின் சத்தம்...
உலக தட்டில்,இவனின் இரத்தம்...
வணக்கம் சொல்லி வரவேற்போம்...
வயிறு நிறைய,சோறு போடுவோம்...
தமிழன் வரலாறு நித்தம்...
பெரியகோவில் சொல்லும்,மொத்தம்...