இந்தப் புத்தாண்டில்
ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கத்திலும்
ஒரு புதுக் கட்டுப்பாடு கோட்டைக்கிழித்து
இந்த கோட்டை தாண்டவேமாட்டேன் என்ற சபதங்களை
கோட்டை விட்டவர்கள் எத்தனையோ எத்தனையோ
புத்தாண்டுகளும் புதுக்கோடுகளும்
எத்தனையோ வந்துப்போகிறது
மனிதன் மட்டும் தன்னை மாற்றிக்கொள்ளாமல்
பழக்க அடிமையாகவே வாழ்கிறான்...