எல்லாம் இப்ப இனிக்க, இனிக்க பேசுவீங்க

எல்லாம் இப்ப இனிக்க, இனிக்க பேசுவீங்க....

தத்துவம் பேசும் தற்காலிக தத்துவார்த்த மேதைகளே!
சம தர்மம் பேசும் சந்தர்பவாதிகளே!
சூழ்நிலை கைதியானதால்
சூழ்நிலைகேற்ப நிறம் மாறுவதை பச்சோந்திக்கே பாடம் கற்று தரும் சுயநல புலிகளே!
உங்களை தற்போதைய நிலைமை இப்படி கடவுற்களாக பேச வைக்கிறது.
பணக்காரன் சொல்கிறான்,
காற்று மாசு இல்லையாம்.
ஒலி மாசு இல்லையாம்
இருபத்தி நாலு மணி நேரமும் பரபரப்பு
இப்போது மிக பெரிய ஓய்வாம்.
எப்போதும் வாழ்க்கையில் தொடை நடுங்கிகளாக இருக்கும் நடுத்தர வர்க்கம் என்ன சொல்லுவான்,
ஊருடன் ஒத்து போவோம் .
வேறென்ன அவனால் சொல்ல முடியும்.
இவர்கள் இருவர் இடையில் சிக்கி தவிக்கும் ஜீவன்கள்
வேறு யாரும் இல்லை பாவம் ஏழைகள் தான்.
வீட்டுகுள்ளயே வேலை வெட்டிக்கு செல்லாமல் ஒரு வருடம் கூட பணக்காரன் நிம்மதியாக இருப்பான்.
சேர்ந்து வைத்து பணம் கறையும் வரை நடுத்தரவர்கம் வீட்டில் இருப்பான்.
ஆனால் அன்றாடம் காய்ச்சி, வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவன் எத்தனை நாள் வீட்டில் முடங்கி கிடப்பான்.
எத்தனை நாள் பட்டினியுடன் கிடப்பான்.
அப்படியே அரசாங்கம் எத்தனை நாள் அவர்களுக்கு உதவும்.
நிலைமை சரியானதும்
பணக்காரன் காற்று மாசு பற்றி பேசுவானா?
ஒலி மாசு பற்றி பேசுவானா?
காரணம் காற்று மாசு,
ஒலி மாசு இரண்டும் ஏற்படுவது அவனால் தானே.
சேர்ந்த பணத்தை செலவழிக்கும் நடுத்தரவர்கம் மீண்டும் வங்கியில் பணத்தை போடாமல் இறுக்குமா.
சிக்கனத்தை கைவிட்டு பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யுமா.
பணக்காரன் பங்களாவின் வாசலில் நாய்கள் ஜாக்கிரதை போர்டு எடுத்து தான் விடுவானா.
பக்கத்து வீட்டில் திருடன் நுழைந்த விட்டான் என்றதும் போய் திருடனை பிடிக்க உதவி செய்யாமல் தன் வீட்டுக்கு இரண்டு பூட்டு எக்ஸ்டரா போடும் பயதாங்கொள்ளி நடுத்தரவர்கம் குணம் மாறிவிடுமா
எல்லாம் சரியாகிவிடும்.
அவனவன் அவன் வேலை பார்க்க தொடங்கி விடுவான்.
சமத்துவம், சம தர்மம், கடவுற்களாக பேசியது எல்லாம் தண்ணீரில் எழுதிய எழுத்தாகிவிடும்.
இங்கே வாழ்க்கையை அதன்படி யாரும் இயற்கையாக வாழ்வதில்லை.
வாழ்க்கையை தன் வசம் ஆக்கும் முயற்சியில்
இறைவன் கொடுக்கப்பட்ட அற்புத வாழ்க்கையை எல்லோரும் வாழ தவற விடுகிறோம்.


- பாலு.

எழுதியவர் : பாலு (24-Apr-20, 10:08 am)
சேர்த்தது : balu
பார்வை : 128

மேலே