சோகம்
அவரவர் சோகம்
பாலுக்குச் சர்க்கரை யில்லையென் பார்க்கும் பருக்கையற்ற
கூழுக்குப் போடவுப் பில்லையென் பார்க்குங் குற்றித்தைத்த
காலுக்குத் தோற்செருப் பில்லையென் பார்க்குங் கனகதண்டி
மேலுக்குப் பஞ்சனை யில்லையென் பார்க்கும் விசனமொன்றே
ஏழைக்கேற்றே சோகம் சோற்றுப்பருக்கை இல்லாத கூழுக்கு உப்பில்லை என்பது.
அவனில் சிலருக்கு காட்டில் காலில் தைக்கும் முள்ளை முறியடிக்க காலுக்கொரு
தோல் செருப்பில்லையே என்ற கவலை. அவர்க்கும் மேற்பட்ட ஒருவருக்கு பாலுக்கு
சர்க்கரை இல்லையே என்ற கவலை. அவரினும் மேம்பட்டவர் ஒருவர்க்கு கனகம்
பத்தித்த கட்டிலுக்கு பஞ்சனை மெத்தை இல்லையே என்கிற கவலை வாட்டுகிறதாம்..
ஒருசமயம் சேரமன்னன் கம்பனைப் பிரிய நேரிட்டபோது மிகுந்த கவலை அளிக்கிறது
என்று சேரன் வருத்தப் பட்டானாம். விசனம் என்பது அவரவர் தகுதிக்கேற்ப அமைகிறது
என்று இந்தப் பாடலை சொல்லிப் பாடி அரசர்க்கும் அவருக்கேற்ப கவலை இருக்கிறது
என்றாராம். சிறிய மற்றும் பெரிய கவலை அவரவர் தகுதி இடத்திற்கேற்ப அமைகிறது
கவலை எல்லோர்க்கும் பொதுவானது என்றார்.