சூரியனும் சூரியகாந்தியும்

உன் விழி வழி வருகிற ஒளியினால்

மொழி பெற்றவள் தான் நான் -
எனினும்

பரந்த உன் கதிர்கள்

விரிந்த என் இதழ்களுக்கானது
அல்ல...

உன் வாசத்தினால் சுவாசம்
பெற்றவள் தான் நான் - எனினும்

உன் வாசம் என் தேசம் வருவது

என் சுவாசத்திற்கானது அல்ல...

என்றுணர்ந்த பின்பும் - என்

எதிர்பார்ப்புகளின் ஏணிப்படிகளை

எண்ண கூட முடியவில்லை-
என்னால்

உலகிற்கு கதிரவன் ஆன நீ - என்

ஒருத்திக்கு மட்டும் புதிரவன்
ஆனாய்

புதியவனும் ஆனாய்....

தெரிந்த மொழியினை கூட

தெரிய படுத்த வழியின்றி

உதிர்ந்து போகிறேன் ஊமையாகி

உன் மறுநாள் உயிப்பில்.......

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (30-Apr-20, 7:38 am)
பார்வை : 203

மேலே