ஒரே ஒரு முத்தம் 😘
ஒரே ஒரு முத்தம் 😘
ஒரே ஒரு முத்தம்.
முடியாது.
ஒன்றே ஒன்று தான்.
வேண்டாம்.
நான் கேட்பது ஒரே ஒரு முத்தம் சத்தமில்லாமல்.
எனக்கு உடன்பாடு இல்லை.
பார்வைகளின் பயணத்தின் உச்சம் முத்தம் தானே.
சரி, ஒன்று மட்டும் தான்.
நான் என்ன நூறா கேட்டேன்.
பேச்சு மாறக்கூடாது.
இதில் பேச்சுக்கே இடம் இல்லை.
நான்கு இதழ்கள் குளத்தில் குளிக்க ஆயத்தம் ஆயின.
உதடுகள் துடித்தன.
உத்தரவாதம் அளித்த உதடு உவகையுடம் முன்னேற,
தாழ்பனிந்த உதடு தர்மசங்கடத்தில் தத்தளித்து தள்ளி போக,
தாகத்தில் தவித்த உதடு
இதழ் கவ்வி தண்ணீர் பருக
ஒரு முறை கனக்கு
பல முறை ஆனது.
முடிவில்லா முத்தம்.
அடங்க மறுக்கும் ஆசை.
விலக முடியாத இதழ்கள்.
உற்சாகமாக உறவாடும் உதடுகள்.
தாகம் தீராத உயிர்கள்.
- பாலு.