கடிமரம் தடிதல் ஓம்பு

கடிமரம் தடிதல் ஓம்பு...
============================================ருத்ரா

நனந்தலை எரிகள் பெய்து
ஊர‌ழிக்கும் மற்று செறுத்திடு அறம்
அஃதே அனைத்து மறம் எனப்படுப.
காக்கைக் கருஞ்சிறைக் ஒக்கும்
கலி இமை என் பூமயிர் மூசும்
கள்ள விழியுளும் கடுங்கணை பாய்ச்சி
கொல்லும் அறத்தினை யாது கற்றனை.
திங்கள் மீது திங்கள் மோதும்
தண்பனிக்காதல் தழைத்திடு மன்னே.
கடும் சினத்தூவல் அடுபோர்
அகற்றவே மென்சொல் ஒற்றி
பாடினான் காவிரிப்பூம்பட்டினத்து
காரிக்கண்ணன் என்றோர் நாவலன்.
மண்ணும் கழனியும் காய் சின வழுதீ!
கடி மரம் தடிதல் ஓம்பு என்றனன் ஆங்கே.
இளைய மரம் கொல்லும் மறம் மறமன்று
என மறைவாய் ஓதி போர் தடுத்தனன்.
அது செத்து என் ஒலிமென் கூந்தல்
விரியச் சாற்றும் நுண்மொழி அறிதி.
பிரிதல் பெருந்தீ உண்ணவோ விடுத்தனை
என் மின்னல் கதுப்பிடை அரியல் சுரிகுழல்
அறிவை.ஆற்று இத்தெரிவையின் சுடுநோய்.

‍=============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (3-May-20, 5:11 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 130

மேலே