அவள்

என்னைப் பார்த்த அவள்
கண்ணால் பேசினாள்
நான் பார்த்தபோது அவள்
நாணி கோணி தரையை நோக்கினாள்
இந்த காலத்திலும் இப்படியோர் பெண்ணா
நாணத்தால் தலை குனிய என்று நினைக்க
இதழ்கள் விரியாது ஓர் புன்னகைத்தந்தாள்
இவள் பேசா மடந்தையோ அழகுச்சிலையோ
என்று நினைக்க அசையாது மௌனமானாள்
அவள் மௌனம் பேசியது
அவள் சம்மதம் அது சொன்னது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-May-20, 5:01 pm)
Tanglish : aval
பார்வை : 319

மேலே