தாரகையே தாரம் ஆனாய் !!!

பாதையிலே நீ போகையிலே
பாதியிலே போகுதடி
பாவை உன் பின்னாலே
பாவி உயிர் தன்னாலே ...

ஆவணி திருவிழாவில்
தாவணி நீ அணிந்தாலே
தாவுமடி கண்ணு ரெண்டும்
அழகர் மலை குரங்குபோலே !!!

மதுரை மல்லிகையே
மாமன் கிட்ட சொல்லலேயே..
தங்க தாமரையே நீ
தண்ணி எடுக்க போகையிலே ...

கோபுர வாசலிலே
போகுற குமரி எல்லாம்
மனதொரமாய் செல்ல
மனதாழமாய் நீ சென்று
மனைவியான மாயமென்ன ..

கள்ளி காட்டுக்குள்
காற்றாட போனவனை
கள்ளி நீ களவாடி
முந்தியிலே முகம்
மறைத்து மூச்சுவாங்க
செய்ததென்ன ????

மஞ்சளிலே நூல்தொடுத்து
நெஞ்சத்திலே தஞ்சமாகி
தஞ்சை கோபுரமாய்
தாரகையே தாரம் ஆனாய் !!!

எழுதியவர் : Muras (3-Aug-10, 12:12 pm)
சேர்த்தது : Muras
பார்வை : 774

மேலே