காலத்தை வெல்லும் நொடிகள்
மனிதா !
தடை கற்களை உடைத்தெறி :
வரலாற்றில் நீ தடம் பதிக்க !
பிறர் வஞ்சக எண்ணத்தோடு :
உன்னை நிந்தனை சொன்னாலும்:
நீ அமைதியாக இரு !
சலனமற்ற நீரோடையாக செல்லும் :
உன் மனது !
மனிதா !
பயம் என்னும் விதையை
நெஞ்சில் விதைத்து விடாதே :
அது !
உன் தன்னம்பிக்கையை அழித்து
அந்த இடத்தில் கொட்டகை போட்டு
உன் லட்சியத்தை நிர்மூலமாக்கிவிடும் :
விடிவெள்ளியாகிய !
உன் லட்சியத்தை அடைய :
நீ விடியற்காலை எழுந்திரு :
காலம் என்பது !
கடலின் அலை போன்றது :
அதை நிறுத்தி அணைபோட்டு
தடுத்தாலும் அதை அடக்க முடியாது :
அதுபோல !
உன் லட்சியத்தை நோக்கி
ஓடோடடி கொண்டே இரு :
காலத்திற்கு ஒப்பாக முடியாமல் போனாலும் :
காலத்தை எதிர்கொண்டு ஓடு :
உன் முயற்சியின் வினைபயன் :
உன் பெயர் சொல்லும் எதிர்காலம் !
நீ இடைவிடாத தோல்வியை
சந்தித்தாலும் :
உன் எண்ணம் !
சிந்திப்பது" தோல்வியே வெற்றிக்கு முதல் படி" என்று
புரிந்து கொள் !
மனிதா !
"நீ காலத்தை வெல்லும்"
அந்த நொடி !
பேசபடுவாய் :
உலக மக்களுக்குகிடையில்
"சாதனையாளனாக" !.....

