உன் உயிராவேன்
மேகமாய் வந்தாய்
மழை யானேன்
மின்னலாய் வந்தாய்
இடியானேன்
கண்ணிலே வந்தாய்
விழியானேன்.
கவிதை யாய்.வந்தாய்
மொழி யானேன்.
மலராய் வந்தாய்
மணமானேன்.
கனியாய் வந்தாய்
சுவையானேன்.
காற்றாய் வந்தாய்
குளிரானேன்.
அன்பே
என்னுயிரே
நீ
நீயாக வந்தால்
உன்
உயிராவேன்!!.