காதல் காட்சி

வானம் இருண்டு வந்தது .
வழி மேல் விழி வைத்து காத்து இருந்தான்
அவள் வரவில்லை .
நேரம் போய்க்கொண்டே இருந்தது இன்று அவள் வரமாட்டாள் என்று நினைத்தான் .
அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று உணர்வு சொன்னது

பின்னால் யாரோ வரும் சத்தம் கேட்டது .
மாலைப்பொழுது இரவு நெருங்கிக் கொண்டிருக்கின்ற நேரம் .விழிகளில் உருவம் நிழலாக தெரிகிறது .பக்கத்தில் வந்த பிறகுதான் தன் காதலி என்று புரிந்து கொண்டான்.
ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்டு கோபமாக திரும்பி அமர்ந்தான்.
என் மேல் கோபமா என்றாள் .
ஏன் சங்க இலக்கியத்தை சொல்லப் போகிறாயா?என்றான்.
ஆமாம் அதைச் சொன்னால் நீங்கள் ரசிக்க மாட்டீர்களா என்றாள்.
எங்கே சொல் பார்க்கலாம் என்றான்.

வெட்டியதால் விழவில்லை வெட்டாமல் இருந்திருந்தால் விழுந்துஇருப்பேன் அத்தான் .செத்ததால் சாகவில்லை சாகாமல் இருந்திருந்தால் செத்திருப்பேன் அத்தான்.
வந்ததால் வரவில்லை வராமல் இருந்திருந்தால் வந்திருப்பேன் அத்தான் என்றாள் .
அற்புதமாக சொன்னாய் என்று அவளை அப்படியே அணைத்துக் கொண்டான் .சங்க இலக்கியங்கள் நமக்குச் சொன்னது காதல் கதை இந்த காலகாம கதை அல்ல.
காதல் என்பது உணர்வாக வருவது உள்ளத்தில் அன்பு பெருக்குவது .அது பெண்ணிடம் மட்டும் வராது எங்கெல்லாம் அன்பு இருக்கிறதோ அங்கெல்லாம் காதல் பிறக்கும் என்று தத்துவம் சொன்னான் கோபம் தணிந்த காதலன்.

எழுதியவர் : சு.இராமஜோதி (9-May-20, 5:02 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : kaadhal kaatchi
பார்வை : 224

மேலே