காதல் தீயில்

மூன்றாம் பிறை யை
முழு நிலவாய்
மாற்றி வைப்பேன்.

விண்மீனின் இமைகளை
எண்ணியே
நான் முடிப்பேன்.

காற்றை நிறுத்த ச் சொல்லி
கட்டளை நீயிட்டால்
கண்மூடி திறப்பதற்குள்
காற்றில்லா செய்திடுவேன்.

கடல் நீர் முழுவதும்
குடிநீராய்.
மாற்றி வைப்பேன்.

நித்தம் நித்தம்
சாக ச்சொன்னால்
செத்தும்
உயிர் வாழ்வேன்.

அழகான காதலியே
என்னை நீ
மறுத்துவிட்டால்

பஞ்சாய் மாறி
என்
காதல் தீயில்
வெந்துசாம்பலாவேன்!!.

எழுதியவர் : சு.இராமஜோதி (9-May-20, 4:31 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : kaadhal theeyil
பார்வை : 78

மேலே