மதுபிரியா
மதுக்கடை கூட்டத்தில் ஒருவர்:
டேய் இங்க இருக்குறவங்கெல்லாம் நாஞ் சொல்லறத நல்லா கேட்டுக்குங்க. நம்மல இதுவரைக்கும் குடிகாரங்கனு சொல்லி கேவலப்படுத்தினாங்க.
நமக்கு இப்ப 'மதுபிரியர்கள்'-ங்கிற அங்கீகாரமும், மதிப்பும மரியாதையும் 'கெடச்சிருச்சு. இனிமே யாராவது குடிகாரன்'ங்கிற சொல்லப் பயன்பபடுத்திநம்மல இழிவுபடுத்தினா அவன் மேல நாம நம்ம சங்கத்தின் மூலமா வழக்குப் போட்டு கம்பி எண்ண வைக்கணும்.
@@@@@@@
என்ன அண்ணே, உங்க மனைவிக்கு பெண் குழந்தை பொறந்து மூணு நாளு ஆகுதுன்னு தகவல் வந்ததாச் சொன்னீங்க. இன்னும் அண்ணியையும் கொழந்தையையும் பாக்கப்போகாம இங்க வந்திட்டீங்க.
@@@@@@
அடேய் சுரேசு, கொழந்தை பொறந்தது அஞ்சாம் தேதி. அன்னிக்குத்தான் நம்ம சொர்க்கலோகத்தை ஏழாம் தேதி தொறக்குறதா அறிவிச்சாங்க. இங்க வந்து தேவாமிர்தத்தை சுவைக்காம எங்கயும் போறதில்லனு சத்தியம் பண்ணீட்டேன்.
@@@@@
அப்ப சத்தியத்தைக் காப்பாத்தறதான் அண்ணே தர்மம். இல்லன்னா அது சாமி குத்தம் ஆகிடும்.
@@@@@
நீ சொல்லறது சரிதான்டா சுரேசு.
@@@@@@
பாப்பாவுக்கு பேரு வச்சீட்டாங்களா?
@@@@@@
உம். அருமையான சமஸ்கிருதப் பேரு. மதுபிரியா.
@@@@@@@
அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்? 'மது'ன்னா 'தேன்', 'தேவாமிர்தம்'னு அர்த்தம். எப்பிடி நான் வச்ச பேரு.
@@@@@@@
அருமையான பேரு அண்ணே. மதுபிரியரான உங்க பாப்பாவுக்கு 'மதுபிரியா'ன்னு பேரு வச்சது ரொம்ப பொருத்தமா இருக்குது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
■■■■■■◆◆◆◆◆◆◆◆■■■■■■■■■■■■■
Madhu = honey, nectar
Priya = darling, beloved
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
