கோணல் பார்வை _-சான்ஸே இல்ல
ஏன்டா நரனா, திரைப்படத் தயாரிப்பு உறுப்பினர் சங்கத்தில பதிவு பண்ணீட்டயா?
@@@@@@@
வெற்றிகரா செஞ்சுட்டனடா வருனா. நான் பேருக்குத்தான் தயாரிப்பாளர். சங்கத்தில படப்பெயர்களை பதிவு பண்ணி அதை வித்தே கோடீஸ்வரன் ஆகப்போறேன்டா.
@@@@@
எப்பிடி?
@@@
திரைப் படங்களுக்கும், திரைத் தொடர்களுக்கும் பெயர் வைக்கத் தெரியாம தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் திணறிட்டு இருக்குறாங்க. நான் பதிவு பண்ணி வச்ச தலைப்புகள வித்தே கோடீஸ்வரன் ஆயிருவேன்டா. நேத்து ரண்டு படத்தைப்புகள ஏலம் விட்டேன். எனக்கு ரண்டுக்கும் கெடச்சு தொகை இருபத்தியஞ்சு லட்சம்.
@@@@@
சரி. சரி. அதைப் பத்திச் சொல்லுடா.
@@@@@@@
'கோணல் பார்வை' -ங்கிற படத்தலைப்பு பதினைஞ்சு லட்சத்துக்கு ஏலத்தில ஒரு பெரிய நிறுவனம் வாங்கிருச்சு. 'சான்ஸே' இல்ல'-ங்கிற படத்தலைப்பே பல வெள்ளி விழாப் படங்களைத் தயாரிச்ச ஈவிம் நிறுவனம் பத்து லட்சத்துக்கு ஏலம் எடுத்திருச்சு.
@@@@@#
ரொம்ப சந்தோம்டா. என்னையும் உன் நிறுவனத்தில கூட்டு சேத்துகடா. நானும் நல்ல படத்தலைப்புகள தயார் பண்ணித் தர்றேன்டா.
@@@@#
சரி, சரி. நீ என் நெருங்கிய நண்பனா போயிட்ட. இல்லன்னு சொல்லமுடியாது.
@@@@@#
ரொம்ப நன்றிடா நண்பா நரனா.