அவள் கண்கள் பேசஅவள் மௌனத்தில்
நீ ஏனோ மௌனத்தில் ஆழ்ந்துவிட்டாய்
ஆயினும் உன் உள்ளத்தின் உளைச்சல்
அத்தனையும் உன் கண்கள் பேசிவிட்டன
இனி நீ பேச வேண்டியது ஒன்றுமில்லை
ஊடல் மறந்தேனடி கண்ணே இதோ
என் நேசக் கைகள் உன்னை அணைக்க
மன்னிப்பாயா என்னை என் ஆருயிரே
வா வந்து என்னை அணைப்பாய்
மீண்டும் நம் காதல் மலர்ந்திட
முத்தம் ஒன்று தந்திடுவாய்
நம் வாழ்வில் அமைதி தென்றல் வீசிடவே