தனிமையில் இனிமை

வண்ண கனவுமே

வர்ணமின்றி கலையுமோ?...

எண்ண குவியலுமே

ஏக்கமுற்று தேயுமோ?...

சிறகொன்று இருந்திருந்தால்

சிறையுற்றிருக்க மாட்டேன் நான்.....

இறகின்றி போனதாலோ

இத்தனிமையிலே தாகம் கொண்டேன்...

தனிமை இல்லா தானிருந்தால் - அதில்

இனிமை காண இயலா திருந்தால்...

வண்மை கொண்ட உள்ள மதும்

வறுமை கொண்டு வாடி ருக்கும்...

வண்ணம் கொண்ட கனவு களும்

வனப்பிழந்து ஓய்ந்திருக்கும்....

ஆகையால்......

திண்மை கொண்டு தனிமையிலும் திறமை படைப்போம்.....

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (11-May-20, 8:36 pm)
Tanglish : thanimayil enimai
பார்வை : 236

மேலே