மனமே நீ மந்திர சாவி
கண்ணில் ஒளியில்லா ஒருவன் வாழ வழியின்றி
வயிற்றை நிரப்ப இறத்தல் தொழிலை மேற்கொண்டான்....
கண்ணில்லா அவன் எழுதியது *"கண்ணில்லா எனக்கு இரக்கப்பட்டு உதவுங்கள்"* என்று
தீட்டிய தட்டியை தன்னருகே வைத்து அமர்ந்தான்....
வருவோர் போவோர் அனைவரும் பார்த்தனர், சிலர் சில்லறை ஈந்தனர், சிலர் இரக்கத்தை ஈந்தனர், சிலர் வெறுப்பை ஈந்தனர்....
அவ்வழியே வந்த பித்தன் தட்டியை பார்த்தான்,அவனையும் பார்த்தான். குறுநகை புரிந்து தட்டியை எடுத்து மாற்றினான். புதிய வார்த்தைகளை பதித்தான். பின் அருகில் அமர்ந்தான்.
சில்லறை போய் சிரித்த காந்தியின் நோட்டுக்கள் விழுந்தன....
கண்ணில்லாதவன் மாற்றபட்ட வார்த்தை என்ன? என அறிய அவனை வினவினான்?
பித்தன் சொன்னான் *"இன்றைய தினம் அழகானது என்னால் தான் காண முடியவில்லை, நீங்கள் காண முயலுங்கள்?"*
மாற்றப்பட்டது வார்த்தை மட்டும் அல்ல கண்ணில்லாதவனின் மனமும் தான்....