பாவம் இவள்
விபச்சாரம்
மிகப் புனிதமானது
ஏனெனில்
இதில் காதலித்து
ஏமாற்றும் சதி இல்லை
சாதி மத பேதங்கள் இல்லை
பாசாங்கு பகல்வேசம் இல்லை
சமத்துவம் நிறைந்திருக்கும்
சில மணித்துளிகளே இருந்தாலும்
இவளுக்கும்
ஒரு மனசிருந்திருக்கும்
அதில் ஆயிரமாயிரம்
ஆசைகள் தேங்கியிருந்திருக்கும்
இவளும் ஓர் தர்ம்பத்தினியாக
வாழ நினைத்திருப்பாள்
இந்த சமுதாயம்
இதே சமுதாயம்
இந்த மதிப்புமிக்க
மாபெரும் சமுதாயம்
ஒரு வகையில்
காரணமாக இருந்திருக்கும்
இவள் இந்நிலையில்
வாழ்க்கை நடத்த
பாவம் இவள்
யார் பெற்றப் பிள்ளையோ
சமுதாயத்தின் அழுக்கை தின்ன
படைக்கப்பட்டுவிட்டாள்..
.