நட்பின் வாசனை
நீ இப்போது
என்னோடில்லை
உன் நினைவுகள்
மட்டும் என்னோடு
என் மனதில்
உன் நட்பை அகற்றிவிட்டு
அங்கு உன் வெறுப்பை
நிரப்பிவிட நினைக்கிறாய்
ஒருபோதும்
உன் நட்பின் வாசனை
என் மனதைவிட்டு
அகலவே அகலாது
எத்தனையோ காலங்கள்
கடந்தாலும்
உன் நட்பின் வாசனை
என் மனதை வசிகரித்துக்கொண்டே இருக்கும்..