ரௌத்திரம் கொள்ளடி பெண்ணே
” ரௌத்திரம் கொள்ளடி பெண்ணே “
உன் பார்வை கனல்கொண்டு
கருகிடவேண்டும் பெண்ணே !
மடிந்திட வேண்டும் பெண்ணே !
நீ அறியா மேனிதொட்ட இழிபிறவி,
இவ்வையத்தின் சுமையடிப் பெண்ணே,
கழுமரம்யேற்றும் இழிமகனடி பெண்ணே !
இழிச்சொல் சொல்லும் மூடர் எவரோ, ,
அவர்கான நெஞ்சுரம் கொள்ளடிப் பெண்ணே.
நல்லறம் கொண்டு வாழடிப் பெண்ணே !
பொய்யொன்று புனைந்து பேசுவோர் எவரோ,,
செவிக்கேளா நிமிர்ந்து நடந்திடு பெண்ணே,
செருக்குடன் நடந்திட செருப்படிதானே பெண்ணே !
உறவின் மரியாதை மறந்தவர் எவரோ,
கனவிலும் நினைத்திடல் வேண்டாம் பெண்ணே,
புதுசிந்தை வழியில் புகுந்திடு பெண்ணே !
ஏளனம் செய்யும் கயவர் எவரோ,
ஆத்திரம் கொண்டு மிதித்திடு பெண்ணே,
தீர நடையுடன் கடந்திடு பெண்ணே !
வக்கிரப் பார்வை கொண்டவர் எவரோ,
புளுவுடன் இணைத்து நினைத்திடு பெண்ணே,
விழிச்சுடரில் புளுதனை எரித்திடு பெண்ணே !
காமக் கயவர் கூட்டம் எவரோ,
இனம்கண்டு சிட்சை தந்திடு பெண்ணே,
களம்கண்டு கொன்று குவித்திடு பெண்ணே !
பிழைக்காண்பின் ரௌத்திரம் கொள்ளடிப் பெண்ணே,
ரௌத்திரம் அற்ற வாழ்வியல் உண்டோ?
ரௌத்திரம் இன்றி நீதிகள் எங்கே?
அடிப் பெண்ணே ரௌத்திரம் கொள்ளடிப் பெண்ணே !
உங்கள்
தௌபீஃக்