காதல் வாசம்
அந்தி வானம் மயங்குதடி .
அருவி மழை கொட்டுதடி .
மழை சாரல் வேளையிலே .
மண்ணில் வாசம் வீசுதடி .
காற்றில் வரும் வாசத்தாலே.
காதல் நெஞ்சில் பொங்குதடி.
கரிசல் காட்டு பூவே உன்னை .
கண்டிட மனம் ஏங்குதடி .
என்னவளே உன்னை அறிய .
என் உயிரை தூதில் வைத்தேன் .
எடுத்து போக காற்றே நில்லு.
எதிரே வந்து சேதி சொல்லு .
நல்ல வார்த்தை நீயும் சொல்லி .
நாளின் வட்டம் தீர்த்து செல்லு.
உறங்காமல் தவித்திடும் இதயம்.
உறங்கிட ஒரு வழியை சொல்லு.