சீண்டாதே

சீண்டாதே

சீனாவும் சிக்கீமில் தானா நுழைந்தாரும்
காணாவே ளைநமது சிப்பாயை-- வீணாய்
உடைத்தனன் மூக்கை படையில் குழப்பம்
கிடையா எனக்கும் கவலை

என்வீட்டில் சீனா நுழையட்டும் என்னைக்கேள்
இந்தியாவா நான்வாழும் நாடுசொல் -- இன்னுமே
சொல்வேன்நான் இல்லாத் திராவிடமே என்நாடு
இல்லாநாட் டில்யார் நுழைவர்

ஐம்பதாண்டாய் எம்திராவி டர்தானே ஆள்கிறார்.
எம்மை யிதுவரை தொட்டதார் -- வம்புக்கு
திராவிடமே எங்கள் இராஜ்ஜியம் யார்க்கு
திரானியிருக் கெம்மை எதிர்க்க

எழுதியவர் : பழனிராஜன்l (19-May-20, 9:38 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 113

மேலே