தமிழ்த் தவளைகள்
தமிழ்த் தவளைகள்
மேடைத் தவக்களைகள் என்செய்யும் ஓடையெனில்
கோடைமறை யும்போல் கொடையாலே--- சேடையாகி
நிற்குமந்த சாக்கடை பற்றுமது சேடன்வாய்
கற்றும் தவளை பேசல்
கிருத்துவர் பொற்கிழிதந் தால்நான் வருவேன்
பெரும்முஸ்லீம் தட்டுபிரி யானி --. தருவார்
பெருந்தொகை பேசியதற் குமேல் தருவார்
அருமை சகோதரர் கேள்
அருந்தமிழை ஆசிரமத் தில்கற்றேன் விற்றேன்
நறுந்தமிழை யார்க்கும்நான் வாழ --. பிறமத
மேடையேறி தேடித் தமிழரைத் பேடியென
தாடைவலிக் கப்பேசு வேன்
அச்சமில்லை அச்சமில்லை எனக்கெதற்கும் அச்சமில்லை
வச்சிபேச யாரும் சிரிப்பார்பார் -- அச்சமில்லை
கட்சிபோர்வை தானிருக்க கட்சியாளர் வந்திடுவர்
தட்டா பெயிலில் எடுக்க
மேடைப்பெச்சாளர்கள் தவளைகள் போன்றவர்கள். தவளைகள் பொல்லா அரசியல்
பாம்புகளின் நல்ல விருந்தாகும். மலையருவி போல் பேசுகிறான் என்று பார்த்தால்
அந்த ஒடை கோடையில் காணாப்பொகும். கோடை என்பது அரசியல் தலைவர்கள்
கொடுக்கும் கொடைக்கு மயங்கி அவரிடம் சேர்ந்து கற்றதமிழை அவனை புகழ
உபயோகிப்பான். ஒன்று கொடையில் மயங்குவன் என்னமோ ஐயர் மந்திரம்
சொல்வதைப் பொள் முணுமுணுப்பு. அது சரியாக தவறா rnrukooda கணிக்க முடியாது.
இப்படி அரசியல் சாகடையைதெடி யோடி கார் கொடுப்பவனிடமும் பணம் கொடுப்பா
நிடமும் சேர்ந்து அவனும் சாக்கடை நீரசி மாறிப்போவன். இதுதான் தவளை கூச்சல்
போட்டு பாம்பின் வாய்க்கு இரையாகும் என்பதாம். இவனால் தமிழ் வளராது சாகும்.
இவனை இனம் கண்டு துரத்துங்கள் இவனே திருவள்ளுவன் புத்தனின் அண்ணன்
என்றவன். இவனால் தமிழ் சாகும் புலவர் புகழ் மறையும் சிவமதம் (அறுவகை இந்து
மதமும் )அழிந்து பிறமதம் வளரும. குழிபறிக்கும் மரியாதை தெரியா சோத்துப்
பண்டாரங்கள்.