நீத் தமிழனா
நீத் தமிழனா ?
தமிழனைப் பச்சைத் தமிழனைக் காட்டுவேன்
தமிழ்ப்பாட பாரதி தாசன் மயிலைத்
தமிழர் மணக்குளவி நாயகனைத் தொழுதார்
தமிழர் இனத்திற்கு தனிகுணம் என்றானே
தமிழரும் சிவநீரைத் தளரநெற்றி யிடுவர்
அருந்தமிழ் அகத்தியனை மறவாத் தோழுவர்
திருஞான மாணிக்க ரசுடன் சுந்திரனின்
திருவாச கத்தேவா ரம்மறக்கார்
பெருமை பிறர்க்கு எடுத்து இயம்புவாரே
குருமுனி குறுமுனி தமிழ்செய்த முனியே
பெரும்பரம் ஈசனையே நினைப்பர் தப்பாமல்
கஞ்சன் மால்ருத்ரன் மகேசன் சதாசிவம்
அஞ்சா பஞ்சபூதம் அறிந்தவர் தமிழர்
பஞ்சமா பாதகம் அஞ்சுவனே தமிழன்
எஞ்சியத் தமிழனை மிலேச்சரே மாற்றாதீர்
அறுவகை சமயத்தை உணர்ந்து போற்றுவர்
திருமுருகன் மால்மருகன் பணிவர் ஐங்கரனாம்
பெரிய ஆனை முகத்து பெருமானை
முதல்தெய் வமெனத் தொழுதிடு வன்பார்
பிறைதரும் சூரிய வணக்கம் மறக்கார்
கங்காளன் நீர்பூசி அங்காள ஈஸ்வரியை
எங்கும் தங்கித் தொழுவன் தமிழன்
மூலனின் உபதேசம் ஊன்றிப் படிப்பன்
குறளின் அறவழி பேசி நடந்து
மறக்கா நல்வழிப் பொருளை யீட்டுவன்
நாணும் மனையாள் மக்களைப் பேணுவன்
நாணா துறவிக்கு முறவுக்கும் உதவுவன்
நானும் கேட்டேன்நீத் தமிழனா
நாணாச் சொன்னார் நானில்லே நானில்லே