விவசாயின் வியர்வைத்துளி பயனற்றதா போயிடுமா

நஞ்சை நிலத்துல மண்டி கிடந்த செடிகளை வெட்டி :
இலைகளை கழனிக்கு உரமாக்கி
ஏறு ஓட்ட மாடு இல்ல, தொழில்நுட்பம்
வளர்ந்திடிச்சி, நாலுசக்கரம் வண்டி வந்து நடுப்பகல் தான் ஓட்டிடுச்சி,
இரைப்பு இரைக்க ஏணியில தண்ணி இல்ல,
வடகிழக்கு பருவமழை வந்தபாடுஇல்லை, முன்நாள் ஊறவெச்ச நெல்விதை, தேக்கி வெச்ச தொட்டி தண்ணில ஊறுதுதயா.
ஒரு நாள் காத்திருந்து பார்த்தா
ஏணில கால்பாகம் தண்ணீ சுரந்துருக்கு, ஓட்டி வெச்ச கழனிக்கு
பத்து நிமிசம் தண்ணி இரைச்சி
எட்டி வெயில் என்னை கொளுத்த
மடைக்கட்டி தண்ணி சீராக போக வழி செஞ்ச:ஊற போட்ட நெல்விதை
சாக்கை பிரிக்கைல முளைத்திருக்க:
நல்லநாள் நான் பார்த்து
அங்காளம்மனை வேண்டிக்கிட்டு விதை நெல்லை வீசி விட்டேனேங்க :
பத்துநாள் தான் போக பச்சைபசல் நெல் நாத்து,
நாத்து எடுக்க நாலு ஆளுகளை நான் போட்டு, நாத்துகளை முப்பது அடி தள்ளி நாதூக்க :
இரவெல்லாம் கழுத்து வலிக்குமூனு நெனைக்கலங்க !
நாத்து நட கூலிக்கு ஆள வெச்சி நடுவு நட்டு முடிச்சினேங்க :
மூணுமாதம் முடிஞ்சி போச்சி :
இன்னும் நாத்து நட்டவங்களுக்கு
கூலி தர முடியல :
ஆறுமாசம் ஓடிப்போச்சி
பொன்னிகதிர் பொன்னிநிறமாக
மின்னுதுங்க :
அறுவடையும் முடிச்சுதல ஆத்தாவுக்கு, படிநெல் கோவிலுக்கு காணிக்கை என :
மனுசுக்குள்ள கணக்கு போட்டு வெச்சிருந்த :
விளைந்த நெல்லை கோணியில புடிச்சி வைத்து, பத்துமூட்டையும் பத்திரமா வண்டியில ஏத்திக்கிட்டு :
பத்து கிலோமீட்டர் தள்ளி நெல் மண்டியில நான் போட்டேனுங்க :
நெல் போட போவ முன்னை
என் பிள்ளை ஓடி வந்து....
அப்பா, எனக்கு பை, எழுதும் பென் இரண்டு வேணும் சொல்ல
நான் சிரிச்சிகிட்டே சரி அம்மா சொல்லி அனுப்புனு:
பின், என் பெண்சாதி ஓடி வந்து
மளிகை சாமான் ஒன்னு இல்ல,
வரும் போது வாங்கி வாங்க சொல்ல தன்னம்பிக்கையோடு நானும் போன
நெல்மண்டியில போட்டுத்தும் பணத்தை கையில் குடுத்தாங்க :
பச்ச தண்ணி கூட குடிக்கல
பணத்தை எடுத்துகிட்டு பத்திரமா வீடு வந்து சேர்ந்தனேங்க,
நாத்து எடுத்தவங்களுக்கு, நடவு நட்டவங்களுக்கு, வைக்கை தூக்கி போட்டவங்களுக்கு, நெல் ஏத்தினா வண்டிக்கும் சேர்த்து,
நெல் வித்த பணத்தை கணக்கு போட்டு கொடுத்துட்டங்க:
மீதி இருக்க கையை பார்த்த
மிச்சமீதி ஏதுமில்லை !
ஊரார் கடனை அடைச்ச எனக்கு
என் குடும்பத்து கடனை அடைக்க வழி சொல்லுங்க........
ஒத்த படிநெல்லையும் கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்துட்டு
இப்ப
அரிசி வாங்க சுட்டெரிக்கும் வெயிலில் நியாயவிலை கடையில்
வரிசையில் நான் நிக்கறங்க.........?.......

எழுதியவர் : Poomani (22-May-20, 3:35 pm)
சேர்த்தது : பூமணி
பார்வை : 1445

மேலே