உழவனின் மனமே

உழவனின் மனமே
****************
உணவை தந்திடும் உழவனின் மனமே
உலகிற்கு ஈடு இல்லா தெய்வம்
ஆற்றலின் நிழலாய் இனிமை தந்தே
ஆழ்கின்றான் உதயமாகும் புது பொழுதையும்

உணவின் மகனாய் பிறந்தே விருப்புடன்
உயிர்கள் அனைத்திற்கும் உயிரை கொடுக்கிறான்
தங்கமான உழவன் தரணியில் பிறந்து
தரையை உழுதே தருகிறான் உணவை
உலகிக்கே குறைவில்லாமல் ஒளியை கொடுத்திடவே
உருகியே ஒய்வின்றியே அயராது உழைக்கிறான்
படிப்பறிவில் சிறக்காமலே பலதையும் செய்கிறான்
பயமின்றியே சுறு சுறுப்பில் திளைக்கிறான்

அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (22-May-20, 8:58 am)
Tanglish : ulavanin maname
பார்வை : 104

மேலே