அக்கறை பச்சை

நதி வழி ஓடும்
இலை போல்
விதி வழி ஓடும்
நிலை இவன் ...

வேரின்றி
வளர்ந்த செடி ,
இவன்
மனம் இன்றி
மலர்ந்த மலர்....

கனவுகள்
கடிய கோட்டை ,
இவன்
தாகம் தணிக்கும்
கானல் நீர்....


சூழ்நிலை கைதியாய்
தன்னை தானே
நாடு கடத்திக்கொண்டு ,
சொந்தம் பிரிந்து,
சொர்க்க பூமி மறந்து,
பெற்றோர்
பாசம் துறந்து,
பிள்ளைகளின்
கனி மொழி கடந்து,
அந்நிய பூமியில்
அன்றாடம்
போராடி....

இனல்கள் சுவாசித்து,
நாட்காட்டியில்
நாட்களை
எண்ணி எண்ணி,
தாய் நாடு செலும்
நாட்களை
எண்ணி எண்ணி....

நெஞ்சின் ஏக்கத்தோடு
கிடந்தது....
நெஞ்சின் வலியை
வார்த்தையில் உறைக்காமல்
கண்ணீரில் எழுதியும்,
அதை
தலையணையில் அழித்திடும்
பல உள்ளங்களின்
நிழல் இவன்....

நாளை நிரந்தரமாக
மண்ணில் உறங்கிட
இன்று
நிரந்திரமற்ற ஆசைக்காக
போராடும்
பலகோடி இதயங்களில்
ஓர் இதயம்
இவன்....

என்றும்...என்றென்றும்
ஜீவன்

எழுதியவர் : ஜீவன் (29-May-20, 1:58 pm)
Tanglish : akkarai pachchai
பார்வை : 58

மேலே