ஓவியக் கவிதை

மல்லிப் பூவா அல்லிப் பூவா
இல்லை நீ கள்ளிப் பூவா
நெல்லிப் பூவா கசப்பூட்டும்
வேப்பம் பூவா? யாரடி நீ மோகினி/
யாராயினும் என் தேவதை நீயெடி/
உன்னோடு கொஞ்சம்
கொஞ்சம் கொஞ்சிப் பேசிட ஆசையடி /
கொஞ்சும் தமிழில் கெஞ்சிப்
பேசிட ஆசையடி/
ஐந்து விரலும் பற்றி
அணைத்தபடி பேசிட ஆசையடி/
மஞ்சம் போட்டு நெஞ்சம்
குளிரப் பேசிட ஆசையடி/
ஆடாதோடாப் பூவே
வாடாமல்லிப் பூவே
நீ என் தோள் சேர்ந்திட வேணுமடி/