உயிர்ப் பறவை

எத்தனை பெரிய காயங்களையும்...
எளிதில் மறைக்க,
நான் கற்றுக்கொண்ட வாசகம் தான்...
"ஒன்றுமில்லை"

மௌனத்தின் மடியில்,
ஒளிந்திருக்கும் என்னை...
கண்ணீர் தடங்களின் வழி
கண்டுபிடித்தாய்...
என் உயிர்ப் பறவை நீ..

உன்னில் தொடங்கி...
உன்னில் முடிகிறது...
என் நாட்கள்.

காலச்சக்கரத்தின்
ஓட்ட வேகத்தில்...
எல்லாம் மாறிப் போகலாம்
நம் அன்பை தவிர..

கண் விழிக்கும் வரை
காணும்...
கனவல்ல நீ...
கண்மூடும் வரை...
நிலைத்திருக்கும் நினைவு.

எனக்காக
கண்ணீர் சிந்துகையில்...
இன்னும் அழகாக தெரிகிறாய் எனக்கு.



எழுதியவர் : மருத கருப்பு (5-Jun-20, 9:08 pm)
சேர்த்தது : மருத கருப்பு
Tanglish : uyirp paravai
பார்வை : 140

மேலே