💔 கவிதையின் காதலி

உனக்காக...
காத்திருக்கும் நேரங்களில் தான்...
கவிதை எனக்கு பழக்கமானது.
நொடிகள் நிமிடங்களாக..!!!
நிமிடங்கள் மணிகளாக..!!!
மணித்துளிகள் நாட்களாக..!!!
காத்திருப்பின் காலமும்...
கவிதையின் நீளமும்...
நீண்டு கொண்டே போனது!!
எனக்கு பொறுமையை...
கற்றுக் கொடுத்தவள் நீ.
வெற்றுத் தாள்கள் எல்லாம்...
கவிதைகள் ஆகிப்போனது உன்னால்.!!
அந்நாளில் தெரியவில்லை...
பின்னாளில் ஒருநாள்...
உனக்கு பதிலாக...
எனக்கு துணையாக...
கவிதையை மட்டும் விட்டுவிட்டு...
காணாமல் போய் விடுவாய் என்று..!!
-------------
------------