முத்தக் காலம் 2

முத்தக் காலம் - கவிதை – செவல்குளம் செல்வராசு

காற்றுவெளி இலக்கிய இதழில் (வைகாசி 2020) பிரசுரமான கவிதைகள்

1. தப்ப வழியின்றி என்

கைச்சிறைக்குள் மாட்டிக்கொண்ட போது

செல்லமாய்க் கேட்டாய்

“கால நேரம் வேண்டாமா?” என்று

முத்தத்திற்கேது கால நேரம்

நாம் முத்தமிட்டுக் கொள்ளும் காலம்

முழுவதும் முத்தக்காலம் தான்

இனிதே துவங்கியது இன்றைய முத்தக்காலம்


2. உன் முத்தத்திற்காக

நான் ஆடிய சதுரங்கத்தில்

என் எல்லா காய் நகர்த்தல்களையும்

எளிதாக தோற்கடித்து விட்டு

எதிர் வீட்டு குழந்தைக்குக் கொடுக்கிறாய்

எனக்கான முத்தங்களை இரட்டிப்பாக

என்னிடம் சேர்க்கச் சொல்லி


3. நான் கேட்டு

நீ கொடுத்த முத்தங்கள்

அந்த நிமிடங்களை இனிப்பாக்குகின்றன

நான் கேளாமலேயே

கொடுத்த முத்தங்கள்

அந்த நாளையே இனிப்பாக்கின்றன

இந்த நாள் இனிய நாள்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (7-Jun-20, 12:31 pm)
பார்வை : 1020

மேலே