வேணாம்வேணாம்வேணவே வேணாம் 1ஆசிரியர்

: ஆசிரியர்:
ஒரு காலத்துலே வாத்தியார்னா ஒரு மரியாதை இருந்தது. ஆனால் இன்னிக்கு மரியாதை இல்லாதது மாத்திரமில்லை. வாத்தியார்னாலே எகத்தாளமாத்தான் பார்க்கறாங்க.
வாத்தியார் பொழப்பு நாய்ப் பொழப்பாப் போச்சு. ஒரு சில வாத்தியார்களோட கேடு கெட்ட நடத்தையினாலே இன்னிக்கு எல்லா வாத்தியார்களும் தலை நிமிர்ந்து நடக்க முடியலை. ஸ்கூல் அட்மிஷன் நேரத்துலே நாங்க எல்லாம் முகமூடி போட்டுக்கிட்டுத்தான் நடமாட முடியுது சொந்தக்காரங்க, சிநேகிதங்க இவங்க கிட்டே இருந்து தப்ப.
பாடத்திட்டங்களெல்லாம் அடிக்கடி மாறிக்கிட்டே இருக்கு. போதாததுக்கு வாத்தியார் வேலையிலே தொடர்ந்து இருக்கணும்னா பரீட்சை வேறே எழுதணும். இனிமே வாத்தியாருக்கு வருஷா வருஷம் பரீட்சை வெப்பாங்க போல இருக்க
இந்தக் காலத்துப்பசங்க எப்படின்னு உங்களுக்கெல்லாம் தெரியும். அவங்களைக் கட்டி மேய்க்கிறது இருக்கே அது பெரும்பாடு. அதுக்கே இவங்க கொடுக்கிற சம்பளம் பத்தாது. அந்தக்காலத்துலே எங்களையெல்லாம் வாத்தியார் கண்டிப்பார். அடிப்பார். யாரும் கேட்க
மாட்டாங்க. அதுக்காக யாரும் தற்கொலை பண்ணிக்கிட்டது இல்லை. இன்னும் சொல்லப்போனா பெற்றோர்களே வாத்தியார் கிட்டே வந்து பையனைக் கண்டிச்சி வைங்கன்னு சொல்வாங்க. ஆனா இன்னிக்கு பையனைத் தொட்டாலே ஆபத்து. இன்னிக்கு கிளாஸுலே பசங்களை அடிச்சாலும் தப்பு. ஜோக் அடிச்சாலும்தப்பு. அதுக்கு ஏத்தாப்போலே இப்ப அரசாங்க சட்ட திட்டங்கள் வேறே. பாடம் நடத்தும்போது பையன் பாட்ட பக்கத்துப் பையனோடே பேசிக்கிட்டிருக்கான். இல்லை. செல்போன்லே பேசிக்கிட்டு இருக்கான். என்னன்னு கேக்க முடியறதில்லை. கேட்டா உங்க வேலையைப் பாருங்கங்கிறான். அவன் மேலே ஏதாவது நடவடிக்கை எடுத்தா வாத்தியாரைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி எல்லா செவுத்துலேயும் கண்டதை எழுதி அசிங்கப் படுத்திடறான். அவனோடே அப்பா கிட்டே கம்ப்ளெயின் பண்ணிடறான். அவரும், அவரோட ஜாதி ஜனங்களும் மறு நாள் ஸ்கூலுக்கு வந்து வாத்தியாரைக் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சிட்டு போயிடறாங்க.
ஒரு பையன் சரியா படிக்கல்லைனு வாத்தியார் திட்டப் போக அந்தப் பையன் மறுநாள் தற்கொலை செய்துகிட்டு இறந்து போயிட்டான். அவன் எதுக்காக தற்கொலை செய்து கிட்டானோ தெரியாது. ஆனாலும் வாத்தியார் திட்டினதாலே தான் அவன் தற்கொலை செய்துகிட்டான்னு தீர்மானம் பண்ணி வாத்தியாரை வேலையிலிருந்து ஸஸ்பெண்ட் பண்ணி அவர் இப்ப கோர்ட் கேஸுன்னு அலைஞ்சிக்கிட்டு இருக்கார். பசங்க கிட்டே இப்ப எல்லாம் ரொம்ப ஜாக்கிரதையா பேசணும். பழகணும். இல்லேன்னா வாத்தியாரை கீரொ பண்ணிடுவாங்க.

பையங்களோட பரீட்சை பேப்பரை திருத்தறதே ஒரு பெரிய தண்டனை.
தலையெழுத்தைவிட மோசமாயிருக்கிற
அவங்க எழுத்தைப் புரிந்து கொள்வதே பெரிய வேலை. பரீட்சைப் பேப்பரை திருத்தறதுக்குள்ளே தாவு தீர்ந்துடும்.
பரீட்சையிலே காப்பி அடிச்சான்னு ஒரு பையனை பிடிக்கப்போக அவன் மேலிடத்துப் பையன் என்று தெரிய வரவே அந்தப்பையன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு அந்த ஆசிரியரை தண்ணியில்லாக் காட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க.

ஒரு பையனைக் கண்டித்ததால் அப்பையன் வாத்தியரை கத்தியால் குத்திக் கொலை செய்தது உங்க எல்லோருக்கும் தெரியும். ஏன்? இன்னிக்கு ஹரியானாலே ஒரு பையன் ஸ்கூல் பிரின்சிபாலை ஷூட் பண்ணி அந்த லேடி இறந்துட்டாங்க. ஆக இந்த விஷயத்திலே நாம அமெரிக்காவை எட்டிப் பிடிச்சிகிட்டு இருக்கோம். இப்படி ஆசிரியருக்கு எந்தப் பாதுகாப்புமே இல்லாமல் போயிட்டுது.

இப்ப வாத்தியாருக்கெல்லாம் நிறைய சம்பளம் கொடுக்கறாங்களேன்னு சொல்லலாம். இப்ப விக்கிற விலை வாசியிலே தொண்டைத் தண்ணி வரண்டு போற மாதிரி கத்தற கத்துக்கு நெய் வாங்கவே இந்த சம்பளம் பத்தாது. அதுவுமில்லாம நீங்க நினைக்கிறா மாதிரி என்னை மாதிரி பிரைவேட் ஸ்கூல்ல வேலை செய்யற வாத்தியார்களுக்கெல்லாம் சம்பளம் கிடையாது. வெறும் 5000 அல்லது 6000ம் தான் கொடுக்கறாங்க. ஆனா
எங்ககிட்டே கையெழுத்து வாங்கறது மட்டும் 15000 ரூபாய்க்கு வாங்கிப்பாங்க. இதை வெளியிலே சொன்னா இருக்கிற வேலையும் போயிடும். எல்லாரும் வாத்தியார்னா "நிறைய லீவு இருக்கும். அவங்களுக்கு என்ன ஜாலி" தான்னு ஊர் உலகத்துலே நினைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா லீவுலே பேப்பர் திருத்தற வேலை தவிர அரசாங்க ஸ்கூல்னா சென்ஸஸ் கணக்கு, ரேஷன் அட்டைக்கான தகவல்கள், எலக்ஷன் ட்யூட்டி இப்படி மாத்தி மாத்தி ஏதாவது ஒரு வேலை இருந்துகிட்டே இருக்கும். பிரைவேட் ஸ்கூல்னா அவங்களுக்கு லீவே ரொம்ப குறைச்சல். மேனேஜ்மெண்ட் சொல்றபடி எல்லாம் ஆடணும். அவங்களோட பெர்சனல் வேலையை எல்லாம் கூட செய்யணும். வாயைத் தொறந்து ஏதாவது பேசிட்டா போயே போச்சு.
இப்ப இருக்கிற காலத்துலே உயிருக்கே உத்தரவாதமில்லாத பொழப்பாப் போச்சு வாத்தியார் வேலை. பையன் எக்கேடு கெட்டா நமக்கென்னன்னு வாயை மூடிக்கிட்டு இருந்தா சமாளிக்கலாம். அது நாம செய்யற தொழிலுக்குத் துரோகமில்லையா? வாத்தியார் வேலையை விட்டு வேறு ஏதாவது வேலைக்குப் போறதே மேல்.
வேணாம். வேணாம். வாத்தியார் வேலை வேணவே வேணாம்.

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (14-Jun-20, 7:06 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 60

சிறந்த நகைச்சுவைகள்

மேலே