நகைச்சுவை துணுக்குகள்
டாக்டர், எனக்குப் பகல்லே தூக்கம் தூக்கமா வருது. ராத்திரி தூக்கமே வரமாட்டேங்குது.
நீங்க என்ன கவர்மெண்ட் ஆபீஸுலே வேலை செய்யறீங்களா?
எப்படி டாக்டர் கண்டு பிடிச்சீங்க?
கவர்மெண்ட் ஆபீஸுலே வேலை செய்யற எத்தனை பேர் இதே கம்ப்ளெயின்டோட என்கிட்டே வராங்க தெரியுமா?
***********
வாசல்லே ஒரே குப்பையா இருக்கு. அதைப் பெருக்குன்னு சொன்னதுக்கு அந்த வேலைக்காரப் பொண்ணு வெளியிலே இருந்து ஏகப்பட்ட குப்பையைக் கொண்டு வந்து வீட்டு வாசல்லே கொட்டிட்டா.
கேட்டா, நீங்க தான் ஒரே குப்பையா இருக்கு, அதைப் பெருக்குன்னு சொன்னீங்களேன்னு நிறைய குப்பைகளை பக்கத்திலே இருந்து அள்ளிக் கொண்டு வந்து ஒரே குப்பையா இல்லாம, இப்ப நிறைய குப்பை இருக்கும்படி பெருக்கிட்டேன்னு சொல்றா.
***********
உங்க பிறந்த நாள் எப்போ?
எல்லோரையும் போலத்தான். நான் எந்தத் தேதியிலே பிறந்தேனோ அன்னிக்குத்தான்
****************
பசிச்சதுன்னு ஹோட்டலுக்குப் போனேன். நாலு தோசை சாப்பிட்டும் பசி அடங்கலை. அஞ்சாவது தோசை சாப்பிட்ட பிறகுதான் பசியே அடங்கிச்சு. பில் தான் ஜாஸ்தி ஆயிட்டுது.
போடா, பைத்தியக்காரா, அந்த அஞ்சாவது தோசையை முதல்லேயே சாப்பிட்டிருந்தா பசி அப்பவே அடங்கி இருக்கும், இவ்வளவு பில்லும் ஆயிருக்காது இல்லே?
***************
உண்மையில் நடந்தது
நான் ஒரு டாக்ஸி புக் பண்ணியிருந்தேன். டாக்ஸி டிரைவர் எனக்கு ஃபோன் பண்ணி இடம் எது என்று தெரிந்து கொள்ள 'எங்கே சார் வரணும்?' என்று கேட்டார். நான் அவரிடம் 'திருவான்மியூர் பஸ் டெப்போ தெரியுமா?' என்று கேட்டேன். 'தெரியும்' என்றார் அவர். 'அங்கே வந்து நின்று கொண்டு பார்த்தால் எதிர் வரிசையில் ரெண்டு கேட் தெரியும். அதுலே இடது பக்கக் கேட்டுக்குள் நுழையவும்' என்று சொன்னேன். 'அதெல்லாம் சரிதான் சார். இடது பக்கக் கேட்டுன்னா ரைட்டா லெஃப்டான்னு சொல்லுங்க சார். வெறும் இடது பக்கம்னு சொன்னா எப்படி சார்?' என்றாரே பார்க்கலாம். 'என்னப்பா உனக்குத் தமிழ் தெரியாதா? இடது பக்கம்னா லெஃப்ட்டுன்னு கூடத் தெரியாதா?' என்று கேட்டேன். 'தெரியும் சார். நான் (பச்சைத்) தமிழன் சார். ஆனா நல்லாப் புரியற மாதிரி லெஃப்ட்டுன்னு (தமிழ்லெ) சொன்னா நான் புரிஞ்சிக்கிட்டு இருப்பேன் இல்லே' என்றார். தமிழ் நாட்டின் கதியை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று எனக்குப் புரியவில்லை.
(அடைப்புக் குறிக்குள் இருப்பது அழுத்தத்திற்காகச் சேர்க்கப் பட்டுள்ளது)
அந்த வண்டியில் நாங்கள் புறப்பட்டோம். டிரைவர் ஒரு ரோடு ஜங்ஷன் வந்த போது எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்ற சந்தேகம் வரவே 'சார், லெஃப்ட்லே தானே திரும்பணும்' என்று கேட்டார். 'எஸ் ரைட்' என்று நான் சொன்னவுடன் லெஃப்டில் திரும்ப ஆரம்பித்த டிரைவர் திடீரென்று ரைட் ஸைடில் திரும்ப ஆரம்பிக்கவே 'என்னங்க, லெஃப்டிலே திரும்பினவர் ஏன் ரைட்லே திரும்பறீங்க?' என்று நான் கேட்கவே அவர் ' நீங்கதானே சார் சொன்னீங்க ரைட்டுனு' என்றார். 'என்னங்க குழப்பறீங்க? 'நீங்க லெஃப்டிலேதானே திரும்பணும்'னு கேட்டீங்க. நானும் 'நீங்க சொன்னது ரைட்'டுனு சொன்னேன். நான் தமிழ்லே 'ஆமாம் சரி' ன்னு சொல்லியிருந்தா உங்களுக்குப் புரியாம போயிருக்கும்
*********